அமைதி
அமைதி தேடும் நல்ல மனமே
அன்பைச் சேர்க்கும் தூய குணமே
கோபம் நீக்கி வாழும் வழியே
நிம்மதி தரும் இன்ப ஒளியே!
கோ கே. ஏழுமலை – கள்ளக்குறிச்சி
ஆசிரியை பள்ளியில் மாணவரிடம் வேண்டுவது
அனைவர் வாழ்விலும் நிச்சயம் தேவை
புயலுக்கு பின்னால் உருவாவது இதுவே
பூதங்கள் பொதுவாக பாதுகாப்பது அருமையாய்
த.பால் தங்கம் – சென்னை
அமைதியாய் சிந்தித்தால் அளையும் மெய்ஞ்ஞானம்,
இமைமூடி காத்திடில் இனிக்குமா வாழ்க்கைதான்?
திமிரங்கள் நீங்கிடும் தெளிந்திட்ட நெஞ்சினில்,
அமைந்திடும் இன்பம் அதுவன்றோ பொக்கிஷம்!
ரா .ஸ்ரீநிதி – சிவகங்கை
உண்மை உரையில் உதாசீனம் உறையாது
உருவான அமைதியில் சிந்தனைச் சிதறாது
வளர்ச்சி வானத்தைத் தொட்டுப் பார்க்கும்
பகைப்பவர் இதயத்தில் அன்பைச் சுரக்கும்
சுந்தர் சுவாமிநாதன் – திருநெல்வேலி
அமைதி என்பது வெறும்
சத்தம் மட்டுமல்ல அது என்
உள்ளத்து உணர்வுகளை பூட்டி
வைக்கும் உன்னத ரகசியம்.
கு. கோகிலா – விழுப்புரம்
நேற்று பழகிச் சிரித்தார்கள் என்னுடன்,
இன்று பழகி மகிழ்ந்தார்கள் மற்றொருவருடன்!
மனது வலிக்கிறது, கேட்கத் துடிக்கிறது,
ஆனால் ஏனோ அமைதியாகக் கடந்து செல்கிறேன்!
தேவி க – சென்னை
அமைதி என்பது அகத்தின் நிலையே
சுமைதான் நீங்கும் சுகத்தின் விலையே
இமைதான் மூடி இருந்து பார்த்தால்
தமைதான் வெல்லும் தன்மை வருமே

