பிணைப்பு

அம்மா அப்பா காட்டும் பாசமே
நண்பர் கூடிப் பேசும் நேசமே
உற்றார் உறவினர் நெஞ்சப் பிணைப்பே
உலகில் வாழும் பெரிய பலமே!

கோ கே. ஏழுமலை – கள்ளக்குறிச்சி

தாயின் பாசத்தில் உருவாவது அதிகம்
திருமண பந்தம் கொண்டு வருவது
இணைந்து இருந்தால் இன்பம் உண்டு
இல்லைஎன்றால்தொல்லைத் தொடர்பு

த.பால் தங்கம் – சென்னை

​பிணைந்திடும் அன்பு பிரியாத சொந்தங்கள்,
இணைந்தே வளர்க்கும் இதயத்தின் பந்தங்கள்!
துணைநிற்கும் காலம் தொடர்கின்ற ஓசையில்,
பிணைப்புள்ள வாழ்வே பெருமிதப் பூரிப்பு!

ரா .ஸ்ரீநிதி – சிவகங்கை

அன்பு உள்ளத்தில் உரிமையின் தோற்றம்
பொய்மைச் சொல்லில் பிறக்கும் ஏமாற்றம்
சுயநலமில்லாச் செயலில் இறுகும் பிணைப்பு
கர்வம் நீக்கிக் காணலாம் சிறப்பு

சுந்தர் சுவாமிநாதன் – திருநெல்வேலி

பூமிக்கும் மரத்திற்கும்
இடையே காணும்
ஒரு அழகிய ரகசியம்
நீயல்லவா.

கு. கோகிலா – விழுப்புரம்

வாழ்வின் உறவுகள் என்றும் நீளும் சங்கிலியாய்,
வளமாய் இணைந்தோம் என்றும் நட்பாய்.
தாங்கிப் பிடிக்கத் தயங்கும் உலகில்,
தவறாது உதவும் என் உடன்பிறப்பின் கரமே!

தேவி க – சென்னை

பிணைப்பு என்பது பிறப்பில் இல்லை
இணைப்பு என்பது இரத்தம் மட்டும் இல்லை
கணைபோல் வந்து காத்து நிற்பதே
மணைபோல் வாழ்வைத் தாங்கும் உறவே

கார்த்திக் – சென்னை 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top