வண்ணம்
அழகுத் தமிழில் பேசும் மொழியே
எழுதும் பாட்டில் இன்ப வழியே
கவிதை தந்து மகிழும் நெஞ்சே
சுவைக்கும் இலக்கிய வண்ணக் குவியலே!
கோ கே. ஏழுமலை – கள்ளக்குறிச்சி
ஏழு நிறமாக வானவில்லில்
தாளில்வரையும் படத்தில் பகட்டாய்
கோலத்தில் மனதை ஈர்க்கும் வர்ணமாய்
உடுத்தும் உடையில் ஒட்டிய உறவாய்
த.பால் தங்கம் – சென்னை
வண்ணத் தமிழின் வளமான காவியம்,
எண்ணத்தில் என்றும் ஏந்திடும் ஓவியம்!
பண்பாட்டின் வேராய் பதிந்திட்ட சொற்களே,
கண்போல காப்போம் கவினுறு மொழியையே!
ரா .ஸ்ரீநிதி – சிவகங்கை
வண்ணம் ஏழு எண்ணத்தில் எழுப்பு
தூரிகையில் தீட்டு மொட்டுகள் விரியும்
காட்சியில் இயற்கை நேசம் புரியும்
வார்த்தைக் குளுமையில் மனிதம் வாழும்
சுந்தர் சுவாமிநாதன் – திருநெல்வேலி
அழிக்க நினைக்கும்
நினைவுகளை கூட
பல வண்ணங்கள் தீட்டி
என் மனதில் சேமிக்கிறேன்.
கு. கோகிலா – விழுப்புரம்
அவள் சேலையில் வண்ணம் ஏழு,
என் நெஞ்சினில் சிந்தனை பதினேழு!
நெஞ்சினில் தவிப்பை உடைத்தேன்,
வலி தந்து விலகிச் சென்றாள்!
தேவி க – சென்னை
வண்ணம் பூசும் வார்த்தைச் சோலை
எண்ணம் தூவும் இன்பக் கோலை
கண்ணில் நிற்கும் கம்பன் வேலை
மண்ணில் வாழும் மொழியின் மாலை

