தேடல்
பள்ளிக்கூடம் போகும் வழியே
உள்ளே ஒளிரும் அறிவுச் சுடரே
நன்மை தரும் நல்ல நூலே
உண்மை காட்டும் கல்வித் தேடலே!
கோ கே. ஏழுமலை – கள்ளக்குறிச்சி
பட்டங்களை தேடி பாரினை விட்டு
மட்டிலா மகிழ்ச்சியோடு மாணவர் செல்வது
கட்டுக்குள் அடங்காத கடலின் ஆழம்
கிட்டும் முத்துக்கள் திறமைக்கு நிச்சயமாய்
த.பால் தங்கம் – சென்னை
தேடிய கல்வி திறந்திடும் வாழ்வை,
கூடிய அறிவே உயர்த்தும் நம் மேன்மையை!
நாடிய ஞானம் நல்குது நேர்மையை,
பாடிடும் ஏடுகள் பகிர்கின்ற உண்மையை!
ரா .ஸ்ரீநிதி – சிவகங்கை
மூடிய அகவிழி முழுமையாய் திறக்கும்
சிந்தித்துச் செயலாற்று அறிவினைப் பெருக்கும்
நூல்களின் தேடல் புதிரான புவியின்
வீட்டைத் திறந்து படைக்கும் விருந்து
சுந்தர் சுவாமிநாதன் – திருநெல்வேலி
இதுவரை யாரும் நடந்திடாத
புதிய பாதையை
உருவாக்கியது
எனது தேடல்.
கு. கோகிலா – விழுப்புரம்
தேடித் தேடி கற்க ஆசை வந்தது,
ஆசை வந்த வேளையில் அறிவு முதிர்வைத் தந்தது,
முதிர்வைத் தாண்டி நின்ற போது,
கல்வித் தேடல் என்றும் வென்றது!
தேவி க – சென்னை
தேடல் தொடங்கும் இடம் தான் கல்வி
ஊடல் இன்றி நம்மை ஆளும் செல்வி
பாடம் கடந்து பார்வை தரும் கேள்வி
ஏடுகள் தாண்டி எழும் பெரும் பள்ளி

