உலகில் பெண் இல்லாவிடில்
உலகில் பெண் இல்லாவிடில் குறையும்
உன்னத மக்கள் தொகை அன்று.
அளவில்லா மக்கள் பெருக்கம் அகலும்
ஆண்கள் பொறுப் பின்றி வாழ்வர் .
ஆசைகள் நிறைவேற அனைத்தும் நடக்கும்
தனிமை அவனைத் தளராது வாட்டும்
தலைகீழாய் பூமியே சுற்றியது போல்
தரணியில் வாழ்வு எதிர்பாரா மாற்றம்
கற்பனையில் கண்டு பாருங்கள் உங்கள்
கனவுலக நாயகி காணாமல் போனால்
நிற்பதும் நடப்பதும் நிலைத்து போகும்
நிம்மதியாய் ஆண்கள் வாழ்வு ஆகும்.

