பெயர் தெரியாதவர்கள் கவிதை

மண்டு என்று சொல்வது ஏனோ
அவனுக்கு மறு பெயர் வேறுஎன்னவோ .
அண்டிய அனைவருக்கும் ஆதரவு அளிப்பவன்
அறிவில் சிறந்த போதகன்அவனே.
முட்டாள் என்பவன் மூடன்அல்ல
முட்டுக்கொடுத்து தேரை நிறுத்தியவன் .
மடையன் என்று ஒரு பெயர் உண்டு .
மடைதிறந்து நீர் பாய்ச்சி
அவனே.
வெட்டியான் என்பவன் சுடுகாடு காப்பவன்
வேறு யாரும் செய்ய முடியாத வேலை
மகுடி ஊதி பாம்பு பிடிப்பது மட்டமா
மன்னனுக்கு உகந்த மதிப்பு தரனுமே
இப்படி பெயர் தெரியாதவர்கள் பலர்
இந்த உலகத்தில் பிறருக்காக வாழ்கிறார்கள்
அவர்களை என்றும்போற்றி புகழ்வோம்
ஆனந்தம் அதிலே அடைவோம் நன்று
த.பால்தங்கம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top