அயல் நாட்டு வாழ்க்கை
அனேகம் பேருக்கு அதிலே ஆசை
அதற்காக செய்த முயற்சி அதிகம்
அப்படி வெற்றியால் அடைந்த தேசம்
அற்புத அமெரிக்கா
ஆனந்த நிலையே
சிநேகம் அங்கும் சிறப்பாக இருக்கும்
சில பல தேவைகள் அவரால் நடக்கும்
கணக்கு எதுவும் வேலைக்கு கிடையாது
கண்டபடி கால் வரும் தவிர்க்க முடியாது
தனக்குத்தானே கார் ஓட்டி பழகணும்
தனிநபர் எதற்கும் தயாராக இருக்கணும்
தற்சமயம் ஊருக்கு வரவும் முடியாது
தானே மீண்டும் போகவும் முடியாது
தான்நிறைய சேமித்து இருந்தால்
தாலாட்டு .
வெளிநாடு நன்றே என்றே பாராட்டு
அன்பு பாசம் எல்லாம் விட்டு
அயல்நாடு செல்லாமல் இங்கே ஈட்டு.
-த.பால் தங்கம்