சுடர்
காலையில்வருவதுகதிரின் சுடர்.
இல்லையெனில் உயிர் வாழாது.
மாலையில் மதியின்சுடர்.
த.பால் தங்கம் – சென்னை
இருளை விரட்டும் அன்பு விளக்கு,
விடாமுயற்சியோடு ஒளிரும்
வெற்றியின் சுடர்!
கோ கே. ஏழுமலை – கள்ளக்குறிச்சி
பார் போற்றும் பரிவினை உடையாள்
கன்னல் மொழியால் காரிருள் நீக்கி
கல்விச் சுடரொளியில் விண்ணையும் எட்டிடுவாள்.
கோகிலா செல்லப்பன் – நாமக்கல்
தீப ஒளியில் பிரகாசிக்கவே
நம்பிக்கை என்னும் சுடர் ஒளி
உலகமெங்கும் தையலை
பலப்படுத்தும் ஆயுதமாம்
த.சுகுணா – மதுரை
அடக்க நினைத்த
அலைகளைக் கிழித்தெழும்
பெண்மையின் ஆழி!
மாணிக்கவாசகம் நாகேசுவரன் – வடலூர்
உறவுகளை உணர்வுகளால்
இணைத்து இல்லம் காக்கும்
அன்பின் சுடர்
மை. சத்திய பாரதி – தூத்துக்குடி
மனையில் விரியும் வெளிச்சம்
எரியும் திரியிலிருந்து விலகாத
ஒழுக்கத்தை கரங்கள் தொழும்
சுந்தர் சுவாமிநாதன் – திருநெல்வேலி
துன்பக் கடலிலும்
புன்னகைக்கும்
தியாகச் சுடர் பெண்மை
தேவி க – சென்னை
பெண்மையின் பேராண்மை
சூரியனை விட பிரகாசமான
சுடர்
லிட்டில் பாரதி – கள்ளக்குறிச்சி
கரிய இருள் என்னும் இடரை- நீக்கி
ஞாலத்தைக் காக்கும் தீச்சுடர்
பெ. சுஜித் – கள்ளக்குறிச்சி
புயல் அடித்தாலும் அணையாத சுடராய்
உன் மனதில் சுட்டு எரியட்டும்
உன் லட்சியக் கனவு

