வறுமை

உழைக்க முடியாதவர்கள்
சேர்த்து வைக்காத
வர்சோம்பிஇருப்பவரைப் பற்றி
பசியா ல் தாக்கும்

த.பால் தங்கம் – சென்னை

பளபளக்கும் அடுக்குமாடிக்கு கீழே,
பசியோடு உறங்கும்
கிழிந்த பாய்!

கோ கே. ஏழுமலை – கள்ளக்குறிச்சி

இளைஞர்களின் கனவுகள்
சிதைந்து கிடக்கிறது
வறுமை என்னும் தீரா நோயால்!!

கோகிலா செல்லப்பன் – நாமக்கல்

ஏழ்மை இல்லாத உலகம் எப்ப
உருவாகுதோ அப்போது, நாம்
முழு சுதந்திரத்தை அடைவோம்!.. பிரதமர்

த.சுகுணா – மதுரை

கிழிந்த சட்டை
கனவுகள் மட்டும் கிழியவில்லை
வறுமையின் வாசலில்
விடியலுக்குக் காத்திருக்கும் குழந்தை!

மாணிக்கவாசகம் நாகேசுவரன் – வடலூர்

உறங்காத பசியுடன்
கனவுகளைச் சுமந்து விடிகிறது
வறுமையின் நாட்கள்

மை. சத்திய பாரதி – தூத்துக்குடி

இருப்பவன் முகத்தில் குடியிருக்கும்
இறுமாப்பு இல்லாதவன் தன்மானத்தை
எதிர்க்க முடியாமல் அழியும்

சுந்தர் சுவாமிநாதன் – திருநெல்வேலி

சாலையோர நடைபாதை
தார் மெத்தையில்
உறங்கும் ஏழ்மை

தேவி க – சென்னை

இயலாமையால் ஏற்பட்டது வறுமை
அதனை இல்லாமல் ஆக்கும் நம்ம திறமை

லிட்டில் பாரதி – கள்ளக்குறிச்சி

சுயநலத்தால் உலகம் சுருண்டது
சூழ்ச்சியால் மனித வாழ்வும் வறுமையால் சுருண்டது

பெ. சுஜித் – கள்ளக்குறிச்சி

உழைத்துத் தேய்ந்த கைகளில்
மிஞ்சுவது வறுமை மட்டுமே

கு. கோகிலா – புதுப்பாளையம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top