ஏக்கம்
வேலைக்காரி யிடம் விடப்பட்ட
குழந்தை யும்வேலைக்காரரிடம்
விட்டு வந்த தாயும் படுவது.
த.பால் தங்கம் – சென்னை
கூட்டத்தில் இருந்தாலும் கூடவே இருக்கும்,
உன் நினைவுகளின் நிழல்
தனிமையின் பாரம்!
கோ கே. ஏழுமலை – கள்ளக்குறிச்சி
உன் தோள் சாய்ந்து
கதைகள் பேசிய இரவுகளெல்லாம்
விடியலற்றுக் கிடக்கிறது தனிமையில்
கோகிலா செல்லப்பன் – நாமக்கல்
என்றொரு நாள் என் மனதில்
உதித்த சுவாசமாய் என்னை
சுற்றி வரும் காற்றானாயே!
த.சுகுணா – மதுரை
தலையணை ஓரம்
தவறிய உறக்கத்தில்
உன் முகம்!
மாணிக்கவாசகம் நாகேசுவரன் – வடலூர்
நிழலொன்றின் தேடல்
இதயத்தில் காத்து நிற்கும்
நீளும் ஏக்கம்
மை. சத்திய பாரதி – தூத்துக்குடி
கடந்து வந்த பாதையில்
பாதத்தில் தைத்த முள்ளின்
தேர்வில் பருவம் பலியானது
சுந்தர் சுவாமிநாதன் – திருநெல்வேலி
ஏக்கத்துடன் என் கண்கள்;
தவறியும் விழவில்லை,
அவள் ஒரு துளிப் பார்வை
தேவி க – சென்னை
தூக்கம் வர தயக்கம் காட்டும்
தனிமையின் ஏக்கம்
லிட்டில் பாரதி – கள்ளக்குறிச்சி
எதிர்பார்த்த ஒன்று கிடைக்கும் என்று
என்னுள் ஆசை விதைத்து விட்டேன்
ஏமாற்றமும் ஏக்கமும் மட்டுமே மிஞ்சியது என்னுள்
பெ. சுஜித் – கள்ளக்குறிச்சி
சுற்றும் பூமியும் சுவாசிக்கின்ற காற்றும் ஏதோ
ஒரு விதியால் இயங்கும்
என் இதயம் உன் ஒருவனின் பாசத்தில்
மட்டுமே இயங்கும் அண்ணா

