அர்த்தமுள்ள கதைகள் -10
1. உருளைக்கிழங்கும் முட்டையும்
ஒரு தந்தை தன் மகளிடம் மூன்று பாத்திரங்களில் தண்ணீர் கொதிக்க வைத்து ஒன்றில் உருளைக்கிழங்கு, ஒன்றில் முட்டை, ஒன்றில் காபி தூள் போட்டார். உருளைக்கிழங்கு மென்மையாகியது, முட்டை கடினமாகியது, காபி தூளோ தண்ணீரின் சுவையையே மாற்றியது.
கருத்து:
கஷ்டங்கள் வரும்போது நீங்கள் எப்படி மாறுகிறீர்கள் என்பதுதான் முக்கியம். கஷ்டத்தை கண்டு உடையாதீர்கள், அதை மாற்றும் சக்தியாக மாறுங்கள்.
2. புத்திசாலி காக்கா
தாகமாக இருந்த காக்கா ஒரு ஜாடியில் கல்லைப் போட்டது. தண்ணீர் மேலே வரவில்லை, மாறாக ஜாடி உடைந்தது! காக்கா சொன்னது, “ஐயையோ.. இது பழைய காலத்து டெக்னிக் போலிருக்கே, இனிமே ஸ்ட்ரா (Straw) தான் யூஸ் பண்ணனும்!”
கருத்து:
காலத்திற்கேற்ப மாற்றங்களை ஏற்றுக்கொள்வது நல்லது.
3. தூங்கும் சிங்கம்
எலி ஒன்று சிங்கத்தின் மூக்கில் ஏறி விளையாடியது. சிங்கம் விழித்து, “ஏன் இப்படிச் செய்கிறாய்?” எனக் கேட்டது. எலி சொன்னது, “உங்க மூக்குல வழுக்கு மரம் விளையாட நல்லா இருக்கு ராஜா!” சிங்கம் சிரித்துக்கொண்டே மீண்டும் தூங்கியது.
கருத்து:
விளையாட்டுத்தனமான உள்ளம் எப்போதும் இளமையானது.
4. நிழலின் அருமை
ஒரு வழிப்போக்கன் சுடும் வெயிலில் நடந்தான். ஒரு மரத்தைக் கண்டதும் அதன் நிழலில் அமர்ந்தான். “இந்த மரம் காய் தராது, பின் எதற்கு?” என சலித்துக்கொண்டான். மரம் மெல்ல சிரித்தது, “பழம் தராவிட்டாலும், இப்போது உன் உயிரைக் காக்கும் நிழல் நானே!”
கருத்து:
உருவத்தை வைத்து ஒருவரின் பயனை எடை போடாதீர்கள்.
5. கிணற்றுத் தவளை
ஒரு தவளை கிணற்றையே உலகம் என நினைத்தது. ஒருமுறை ஆமை ஒன்று கடலைப் பற்றிச் சொன்னபோது, தவளை நம்பவில்லை. ஆமை அதைத் தூக்கிச் சென்று கடலைக் காட்டியது. தவளை மிரண்டு போனது.
கருத்து:
உங்கள் அறிவின் எல்லையை விரிவுபடுத்துங்கள், உலகம் மிகப்பெரியது.
6. கோபத்தின் வடு
சிறுவன் ஒருவன் கோபப்படும்போதெல்லாம் சுவரில் ஆணி அடித்தான். கோபம் குறைந்தபின் ஆணிகளைப் பிடுங்கினான். தந்தை சொன்னார், “ஆணிகள் போயிருக்கலாம், ஆனால் ஓட்டைகள் அப்படியே இருக்கும்.
கருத்து:
கோபத்தில் பேசும் சொற்கள் மனதில் ஆறாத வடுக்களை உண்டாக்கும்.
7. அழுக்குக் கண்ணாடி
ஒரு பெண் ஜன்னல் வழியாகப் பார்த்து, “பக்கத்து வீட்டுத் துணிகள் அழுக்காக இருக்கிறது” என்றாள். ஒருநாள் தன் வீட்டு ஜன்னலைத் துடைத்துப் பார்த்தபோதுதான் தெரிந்தது, துணி சுத்தமாக இருக்கிறது, அழுக்கு அவள் வீட்டு ஜன்னலில் என்று.
கருத்து:
மற்றவர்களைக் குறை சொல்லும் முன், நம் பார்வையைச் சரி செய்வோம்.
8. கழுகும் பயிற்சியும்
புயல் காற்றில் மற்ற பறவைகள் ஒளிந்தபோது, ஒரு இளங்கழுகு மட்டும் எதிர்த்துப் பறக்கப் பழகியது. சிறகுகள் வலித்தாலும், தினசரி எடுத்த அந்தப் பயிற்சி அதன் பலத்தைக் கூட்டியது. இறுதியில், மேகங்களுக்கு மேல் உயர்ந்து, புயலையே வென்று சிகரத்தைத் தொட்டது!
கருத்து:
கடினமான சூழ்நிலையிலும் சோர்வடையாமல் நீ எடுக்கும் தொடர் பயிற்சியே, ஒருநாள் உன்னை மற்றவர்கள் எட்ட முடியாத உயரத்திற்குக் கொண்டு செல்லும்!
9. பாராட்டு
ஒரு குருவி தன் கூட்டை அழகாகக் கட்டியது. ஒரு குரங்கு அதைப் பிரித்து எறிந்தது. குருவி வருந்தவில்லை, மீண்டும் கட்டியது. குரங்கு கேட்டது, “ஏன் கவலைப்படவில்லை?”. குருவி சொன்னது, “உன் அழிக்கும் குணத்தை விட என் படைக்கும் குணம் பெரியது.”
கருத்து:
மற்றவர்களின் எதிர்மறை எண்ணங்கள் உங்கள் உழைப்பைத் தடுக்கக் கூடாது.
10. சிற்பியின் ரகசியம்
ஒருவர் சிற்பியிடம் கேட்டார், “இந்த அழகான சிலையை எப்படிச் செய்தீர்கள்?”. சிற்பி சொன்னார், “சிலை ஏற்கனவே கல்லுக்குள் இருந்தது, நான் தேவையற்ற பகுதிகளைச் செதுக்கி நீக்கினேன், அவ்வளவுதான்.”
கருத்து:
நமக்குள்ளும் திறமை இருக்கிறது, தேவையற்ற பழக்கங்களை நீக்கினால் அது வெளிப்படும்.

