எதையும் விட பெரிய Motivation — அம்மாவின் நம்பிக்கை
வாழ்க்கை சில சமயம்
மூச்சு விட itself’a பயப்படும் அளவுக்கு
சோர்வாகி விடும்;
நம்மை நாமே சந்தேகிக்கும்போது கூட
அம்மாவின் நம்பிக்கை மட்டும்
நம்மை நம்பத் துணிவு தரும்.
அவள் சொன்ன
“உன்னால் முடியும்” என்ற
அந்த ஒரு வரி—
மலைகளை நகர்த்தும்
மந்திர சக்தி போல.
எத்தனை பேர் தோல்வியைச் சொன்னாலும்
அவள் மட்டும்
வெற்றியின் வடிவத்தை
என் முகத்தில் பார்த்தாள்;
நான் தான் பார்க்காத
என் திறமையை
அவள் கண்ணே முதலாக கண்டது.
படிக்காமல் தூங்கிய இரவுகளில் கூட
“பரவாயில்லை…
நாளை இன்னும் முயற்சி பண்ணலாம்”
என்ற அவளது மென்மையான நம்பிக்கை
என் உள்ளத்தை உடைக்காமல் காத்த பாதுகாப்பு.
வெற்றி தூரத்தில் நின்றாலும்
அவள் நம்பிக்கை மட்டும்
எதிர்காலத்தை நெருங்கியதாக உணரச் செய்கிறது;
“தேடுகிறவன் தான் அடைவான்”
என்று சொல்லி
என் கனவின் கதவைத் திறக்க வைத்தது.
சில வேளைகளில்
உலகம் நம்மை நம்பாமல் போகலாம்;
நண்பர்கள் கூட
“இது கடினம்” என்று சொல்லலாம்;
ஆனால் அம்மா?
அவள் மட்டும்
கடினத்தை கூட
கற்பக மரம் போல
நமக்கு எளிதாக்கிக் காட்டுவாள்.
அவளது நம்பிக்கை
ஒரு Ordinary Motivation அல்ல;
எந்த Self-help Book-லுமே
எழுதப்படாத
உண்மையான பாடம்.
அவள் வைத்த நம்பிக்கையை வாழ்த்த
நாம் வேண்டியது
வெற்றி அல்ல—
முயற்சி.
ஏனெனில்
“முயற்சி செய்றான் என் பிள்ளை”
என்று அவள் பெருமை படும் சிரிப்பு
வெற்றிக்கும் மேலான வெற்றி.
அம்மா…
உன் நம்பிக்கை
என் உடல் ஓடும் இரத்தம்;
என் பயம் உடையும் ஒளி;
என் நாள் ஆரம்பிக்கும் காரணம்;
என் நெஞ்சு துடிக்கும் தைரியம்.
உலகம் எதையும் கொடுக்காவிட்டாலும்
நீ கொடுத்த நம்பிக்கையே
என்னை வாழ வைத்த
மிகப் பெரிய Motivation.