எண்ணித்துணிக கருமம்

எண்ணித் துணிக கருமம் என்றே
எழுதி வைத்தார் வள்ளுவரும் நன்றே
பண்ணில் அதனனை பாடி ப்பாரு
பரவசம்எங்கும் பொங்கும் காணு
உண்டு உறங்கி வாழ்வது வாழ்வல்ல
உன்னதம் எண்ணத்தில் காண்பதே வாழ்வு
கண்முன் காண்பதும் கனவாய் இருக்கலாம்
கதைகளைக் கேட்டு ஆராய்ந்து முடிவெடு
சண்டை சச்சரவு போட்டிட வேண்டுமெனில்
சகலரும் எண்ணித் துணிய வேண்டும்
தண்டனை கொடுக்கும் முன்பு எண்ணிடு
தப்பை கோவலன் மூலம் அறிந்திடு
நண்பனுக்கு உள்ளும் எண்ணித் துணியனும்
நாளும் அதுவே நன்மையை கூட்டும்
கண்ணியமாய் காந்தி
எண்ணி துணிந்ததால்
கை துப்பாக்கியை கைவிட்டு அகிம்சை ஏந்தினார்
உண்ணாவிரதம் நடத்தி வெள்ளையனை ஆட்டினார்
உணர்ந்த அவனும் மண்ணை விட்டு ஓடினான்
எண்ணிய இலங்கைப் படையும் எங்கு எங்கேயோ
என்று மீளும் சுதந்திரம் என்று
புண்ணிய பாரதம் கனடா ஜெர்மனி
பூர்வீகம் விட்டு பல நாடுகள்
எண்ணி எண்ணி காத்திருக்க காணுகின்றோம்
எனறாவது தீர்வு வரும் என்பது நம்பிக்கை
-த.பால் தங்கம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top