tamil kavithai for lover
இதம்
மாலை பொழுதில் ஆழி கரையில்
காதலி மடியில் தலை சாய்த்திருந்தேன்
ஐந்து விரலால் கலைத்த மயிரில்
இதமாய் வருட இதம் கண்டிருந்தேன்
நகர்கிறேன்
உன்னை சந்திக்கும் ஒவ்வொரு கணமும்
முதல் சந்திப்பாகவே மீண்டும் உணர்கிறேன்
என்னை மறந்து காதலில் கரைந்து
மீண்டும் பிறந்து தூரமாய் நகர்கிறேன்
சிரித்தாள்
அணு அளவு ஒருமுறை சிரித்தாள்
ஃபெம்ட்டோ நொடியில் கண்களை அசைத்தாள்
ஆகாயம் விலக அண்டம் கடந்தேன்
வெய்யோன் கதிரில் வேகமாய் மறைந்தாள்
மின்னல்
மின்னல் கீற்றுகள் எனக்குள் பாய்ந்தன
முதல் முறை அவன் தொடுகையில்
ஆக்சிடோசின் அதிகரித்து அவனில் கலக்க
முடிந்த காலம் முழுவதும் மாய்ந்தன
காதலி
எல்லாம் மறந்து நகர்ந்த போதிலும்
அறையை நிறைக்கும் கவிஞனின் காகிதம்
காரணம் காதலி டாவின்சி ஓவியம்
கம்பன் தீட்டிய கற்பனை காவியம்