காதல் பிரிவு வலி கவிதை

நீ பிரிந்து சென்ற அந்தப் பாழாய்ப்போன நொடூயில்,

என் இதயத்தின் துடிப்புகளும் உறைந்து போனது!

வார்த்தைகள் தராத பெரும் வலியை,

உன் மௌனமான விலகல் என் உயிரில் தந்துவிட்டது.

நெஞ்சுக் கூட்டில் நீ ஏற்றி வைத்த காதல் தீ,

இன்று என் நினைவுகளையே சாம்பலாக்கிக் கொண்டிருக்கிறது.

உன் புன்னகை சிந்திய என் வீதியின் ஓரங்களில்,

இன்று என் கண்ணீர் ஆறாய்ப் பெருகி ஓடுகிறது.

“உயிர் பிரியும் மரண வலி கூட ஒருமுறைதான்…

ஆனால் உன் பிரிவு தரும் வலியோ, ஒவ்வொரு நொடியும் என்னைக் கொல்கிறது!”

கனவுகளில் கூட உன் முகம் வந்து போகையில்,

விழித்துக் கொள்ளும் கணங்கள் நரகமாய் வலிக்கிறது.

இவ்வுலகின் ஆகச்சிறந்த ரணமும் தோற்றுப்போகும்,

என் நெஞ்சில் நீ தந்து சென்ற இந்தப் பிரிவு வலியின் முன்னால்!

உன் நினைவுகளின் சிறையில் சிக்குண்ட என் ஆன்மா,

மீள வழியின்றி மெல்ல மெல்ல மரணித்துக் கொண்டிருக்கிறது!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top