ஆழி

பேரலைகள் பேயாட்டம் ஓலம்
பெண் மனத்தின் ஆழம்

த.பால்தங்கம் – சென்னை

மரங்களை வெட்டி உலகை நீ அழி
மழையின்றி வாடும் மனிதனின் விழி

கோ கே. ஏழுமலை – கள்ளக்குறிச்சி

அகிலத்தை காக்கும் கடவுளே உன்னால்
நாங்கள் பசுமை காற்றை சுவாசிக்கிறோமே

த.சுகுணா – மதுரை

இறைவனின் விழி
இயற்கையில் அமைந்த ஆழி…

ஆறுகள் அடங்கும் இடம்…
ஆழி இருக்கும் தடம்…
ஆழியை அலங்கரிக்கும்
அல்லும் பகலும் அழகிய ஓடம்…

சு.க.சீ லிட்டில் பாரதியார் – கள்ளக்குறிச்சி

பூமியின் கண்ணீரைத் தன்னுள் வாங்கியும்….,
புன்னகையோடு அலைகளால் கரையைத் தொடுகிறது ஆழி

கு. கோகிலா – விழுப்புரம்

நெகிழியை நீ அழி,
இயற்கை அன்னை காட்டுவாள் உனக்கு வழி!

தேவி க – சென்னை

உன் எழிலே வாழ்வு
சினமின்றி காத்திடு அன்னை
ஆழியே

சுந்தர் சுவாமிநாதன் – திருநெல்வேலி

அலைகளின் ஓசையில் கவிதை பாடும் நீலக்கடல் ஆழி!
அணுவிலும் உயிர் வளர்க்கும் இயற்கையே உலகின் வாழி!

சி. கிருஷ்ணவேணி – தருமபுரி

அகிலம் இருண்டு கண்ணீர் விட்டாலும்
அனைத்தையும் உள்வாங்குவது ஆழி ஒன்றுதான்

பெ. சுஜித் – கள்ளக்குறிச்சி

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top