இயற்கை ஹைக்கூ கவிதைகள்
மழை கவிதைகள்
வானம்
பூமியை முழு நேரமும் பார்த்திருந்தும்
அடைய முடியவில்லை என்று
கண்ணீர் விடுகிறது வானம்
மழை
முத்தமிடுகிறது
சிதறிய வெள்ளி முத்துக்கள்
தலை மேல் விழுந்து
கன்னத்தை முத்தமிடுகிறது
மழை
நீலக்கடல்
நீலக்கடல் அனுப்பிய செய்திக்கு
நீண்ட காலம் கழித்து வரும் பதில்
மழை
புல்வெளிகள்
பச்சை புல்வெளிகள்
ஆனந்தம் காண்கிறது
வானத்தின் அழுகையில்
மழை
விவசாயி
அளவாய் வந்தால்
விவசாயி மகிழ்கிறார்
அதிகமாய் வந்தாலோ இகழ்கிறார்
மழை