வித்து
விதையை விதைக்கும் உழவன் கையே
விளையும் பயிரைக் காக்கும் மழையே
உலகின் பசியைத் தீர்க்கும் தொழிலே
நாட்டின் உயர்வாய் வாழும் பயிரே!
கோ கே. ஏழுமலை – கள்ளக்குறிச்சி
விருச்சத்தோடு தொடர்பு கொண்டது
விதைக்க நெல்லை பாதுகாப்பதுகண்கூடு
வீறிட்டு கிளம்பி வந்து விடுமே
விளைந்தால் மட்டும் உணவுக்கு வழி யுண்டு
த.பால் தங்கம் – சென்னை
வித்துக்குள் உறங்கும் விசுவாசப் பயிர்களே,
முத்துபோல் முளைக்கும் முகிலின் தூறலிலே!
செத்துப்போகாத சேற்றில் விளைந்திடும் செந்தழல்,
வித்தையாம் உழவு உலகிற்கே உயர்த்தலாம்
ரா .ஸ்ரீநிதி – சிவகங்கை
வீரிய வித்து விளைச்சலைப் பெருக்கும்
சோம்பலில் முடக்கம் பஞ்சத்தைச் சேர்க்கும்
கருத்த மேனியை வியர்வையில் நீராட்டு
களத்துமேட்ல மகசூலை அடையாளம் காட்டு
சுந்தர் சுவாமிநாதன் – திருநெல்வேலி
மண்ணோடு மண்ணாய்
நான் கரையும் தருணத்தில்
கூட ஒரு புதிய உலகம்
உருவாகிறது அல்லவா!
கு. கோகிலா – விழுப்புரம்
வித்தாய் விதைத்தேன் மண்ணில்!
புதைந்தாய், வீறு கொண்டு பயிராய் எழுந்தாய்,
அனைவரும் புசிக்கப் பசியாற்றினாய்,
பாரினில் உன்னை விடப் புனிதமானவர் யாருமிலரே!
தேவி க – சென்னை
வித்து ஒன்று விழுந்தால் வயலில் முளைக்கும்
சித்தம் வைத்து உழுதால் பயிராய் விளைக்கும்
நித்தம் வியர்வை சிந்தும் உழவன் கையில்
மொத்த உலகின் பசியும் தீர்ந்து அடங்கும்

