செயற்கை செயலி
செயற்கையே மாந்தரின் படைப்பு
சேர்த்து விட்டோம் வீடுகளில் அடைப்பு
வெயில் மறைக்க ஏசி எங்கும்
வேதனை அதனால் அகலுது கொஞ்சம்
அம்மிக்கு பதில் மிக்சி அழகாய்
ஆட்டுக்கல்லுக்கு பதில் கிரைண்டர்
சும்மா செயற்கையை குறை சொல்லாதீர்
சுகமாய் இருப்பதை என்றும் மறையாதீர்
அம்மா சமைத்த பிறகு அடுப்பு
அருகே செல்லவே நமக்கு கடுப்பு
அடித்து கல்லில் துவைத்தோம் துணியை
அதற்காக வந்தது வாஷிங் மெஷின்
இடுப்பொடிய வேலை இது இல்லை
உடுப்புகள் எல்லாம் விரைவில் துவைக்கும்
நமது உல்லாச வாழ்க்கைக்கு அது நிச்சயம் தேவை
கை பேசியை கடிந்து கவிதை வடிக்கிறோம்
கவிதை எழுத வந்த தலைப்பை அதில் பார்க்கிறோம்
நடந்து போகும் கடைக்கு கூட
நாம் வண்டியில் செல்லும் காலம் இது
மருத்துவர் நடை பயிற்சி யை கட்டாயம் என்றார்
மறக்காமல் நாளும் நடை பயிற்சி செய்கிறார்
செயற்கை செயலியின் கட்டுப்பாட்டில் இன்று நாம் இருக்கிறோம்
செயற்கை இயற்கையை வென்று விட்டது
செழிப்பு அதனால் கூடிவிட்டது
செயற்கை முறையில் பாசனம் செய்வதால்
செலுத்துகிறோம் மருந்து க்கு பணம் ஏராளம்
செயற்கை முறையில் செய்யாவிட்டால்
140 கோடிக்கு உணவு தட்டுப்பாடு
செயற்கையை கண்துடைப்பாய் குறை சொல்லுங்கள்
அது இன்றி இனி உங்களால் வாழ முடியாது.
உணர்ந்துசெயற்கை தலைப்புகள் செய்திகளை தந்தார்
உன்னத செயற்கை செயலி
நமக்கு உதவிட ஆயிரம் வழி உண்டு
த.பால்தங்கம்