மௌனம்
தப்பு செய்தவரும் காப்பர்.
தயாராகாத வரும் காப்பர். காஞ்சி
பெரியவர் போன்றவர் காத்தது .
த.பால் தங்கம் – சென்னை
வார்த்தைகள் தோற்றுப்போகும் இடத்தில்,
இதயங்கள் பேசிக்கொள்ளும்
அழகிய மொழி!
கோ கே. ஏழுமலை – கள்ளக்குறிச்சி
என் அன்பினைப் பொழிந்திட
சொல்மாலை தொடுக்கும் வேளை
மொழியும் தடை விதிக்கிறது- மௌனம்
கோகிலா செல்லப்பன் – நாமக்கல்
எவ்வளவு துன்பம் நம் மனதில்
இருந்தாலும் மௌனம் ஒன்றை
நம்மை காக்கும் கடவுளாம்!
த.சுகுணா – மதுரை
உதடுகள் மூட
உள்ளம் மட்டும் பேசுது
மௌனத்தின் மொழி!
மாணிக்கவாசகம் நாகேசுவரன் – வடலூர்
வார்த்தைகள் ஓய்ந்து
ஆன்மா பேசும் மொழி
ஆழ்ந்த மௌனம்
மை. சத்திய பாரதி – தூத்துக்குடி
விழி கேட்ட வினாவிற்கு
வீண் பிடிவாத்தால் புரிந்த
மனதின் குறுகிய பரப்பளவு
சுந்தர் சுவாமிநாதன் – திருநெல்வேலி
விடைதேடும் ஆசிரியர்!
மாணவர்கள் தந்த
மௌன விடை
தேவி க – சென்னை
வீண் விவாதங்களுக்கு
விடையாக நான் தருவது
மௌனம்
லிட்டில் பாரதி – கள்ளக்குறிச்சி
உள்ளத்தில் உள்ளவற்றை கூற
உடலின் எண்வகை மெய்ப்பாடுகளும் கூறுகிறது
என்நா மட்டுமே மௌனம் காக்கிறது
பெ. சுஜித் – கள்ளக்குறிச்சி
பேசும் மனிதன் நடுவில்
பேசாது காக்கும் மௌனம்
ஒரு தனி அழகே

