தவிப்பு

காதலிக்கு தாய் முன்னால் வருவது
திருமணத்திற்கு பின்பு ஆனந்தம் தருவது

த.பால்தங்கம் – சென்னை

உன்னைக் காணும் இதயத்தின் தவிப்பு
உறங்க விடாதோ அன்பின் நினைப்பு

கோ கே. ஏழுமலை – கள்ளக்குறிச்சி

வெகுதூரம் நீ சென்றாலும் உன் நினைவுகளை
கண்ணுக்குள் வைத்து காக்கும் இமையாவேன்.

த.சுகுணா – மதுரை

காதல் வர காரணம் இருவிழிகள் ஈர்ப்பு…
காதல் வந்தாலே தவிப்பு…
காரணம் காதலர்களின் எக்கச்சக்க எதிர்பார்ப்பு.

சு.க.சீ லிட்டில் பாரதியார் – கள்ளக்குறிச்சி

தான் ஒன்றை விரும்பும் போது…
கிடைக்காமல் போகும் அந்த ஒரு வேதனையின் தவிப்பு

கு. கோகிலா – விழுப்புரம்

அவள் விட்டுச்சென்ற நினைவுகளின் தொகுப்பு
தினம் தினம் என் நெஞ்சினில் ஏனோ தவிப்பு!

தேவி க – சென்னை

விழி விரும்பிய ஓவியமே
புரிதலின் தவறால்
நாளுமே தவிப்பு

சுந்தர் சுவாமிநாதன் – திருநெல்வேலி

உன் மௌனம் பேசும் மொழியில் என் மனம் கொள்ளும் தவிப்பு!
உன் நினைவு தீண்டும் பொழுதெல்லாம் உயிரில் இனிக்கும் இனிப்பு!

சி. கிருஷ்ணவேணி – தருமபுரி

மூவுலகையும் வெல்லும் பேச்சுத் திறன் இருந்தாலும்
மூன்று வார்த்தையை மட்டும் அவளிடம் சொல்ல என் நா தவிக்கிறது

பெ. சுஜித் – கள்ளக்குறிச்சி

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top