மடி
உலகத் துயரங்கள் யாவும் நொடியில் கரையும் உன்னத சொர்க்கத் தொட்டில்!
கோ கே. ஏழுமலை – கள்ளக்குறிச்சி
இறைவன் படைத்த பிள்ளை பெறும் சாதனம்.
த.பால் தங்கம் – சென்னை
காக்கும் இறைவனக்கும் அவள் தாய் மடியில் தான் அரவணைப்பு கிடைக்கும் என்ற உணர்வு தோன்றும்.
பெ. சுஜித் – கள்ளக்குறிச்சி
உலகம் என்னை மனிதனாக்கியது, அம்மா மட்டுமே என்ன இன்னும் குழந்தையாகவே வைத்திருக்கிறாள்!
சி. கிருஷ்ணவேணி – தருமபுரி
உயிரும் உறங்கும் உன்னதமான இடம் — அன்னையின் மடி
மாணிக்கவாசகம் நாகேசுவரன் – வடலூர்
பிரபஞ்சத்தின் அத்தனை இரைச்சல்களும் அடங்கிப் போகும் ஒற்றைப் புகலிடம் ‘தாயின் மடி ‘.
கு. கோகிலா – விழுப்புரம்
அன்பில் தலை சாய்க்க கிடைத்த தவப்பயன்
சி.கனகலெட்சுமி – கோயம்புத்தூர்
உலகமே கைவிட்டாலும் தாங்கும் கரம், அம்மாவின் மடி — தோல்விக்கும் தாலாட்டு பாடும் சுகம்!

