தேடல்

உன்னைத் தொலைத்த விநாடியிலிருந்து, என்னை நானே தேடிக் கொண்டிருக்கிறேன்!

கோ கே. ஏழுமலை – கள்ளக்குறிச்சி

கண்ணால் பேசி கருத்தால் கவர்ந்தது

த.பால் தங்கம் – சென்னை

தேடுகிறேன் என் தேகம் தேய்ந்து போகும் வரை அவளை!

பெ. சுஜித் – கள்ளக்குறிச்சி

தேடி கிடைத்தாலும், கிடைக்காமல் நினைவில் நின்றாலும், உள்ளொளியூட்டும் அகல் விளக்கு!

சி. கிருஷ்ணவேணி – தருமபுரி

உன் விழிகளில் தொலைந்த என்னைத் தேடுகிறேன் – காதல்

மாணிக்கவாசகம் நாகேசுவரன் – வடலூர்

மலை உச்சியின் நடுவில் தன்னை துளைத்துவிட்டு தேடும் ஒற்றைப் பனித்துளி.

கு. கோகிலா – விழுப்புரம்

முடிவான பயணத்தில் முற்றுப்பெறாத சுகமான தொடர்கதை

சி.கனகலெட்சுமி – கோயம்புத்தூர்

உலகம் முழுதும் தேடியும் கிடைக்காத நிம்மதி, ஒரு மனம் புரிந்துகொள்ளும் நொடியில் கிடைக்கும்!

ரா. ஸ்ரீநிதி – சிவகங்கை

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top