ஆணும் பெண்ணும்
தனது
திருமணத்திற்குப் பின்,
"ஆணும் பெண்ணும் சமம்",
என் பெண்ணியம்
பேசும் பெண்,
ஏனோ
அந்த சமத்துவத்தை,
தனது மகனின்
திருமணத்திற்குப் பின்
(வசதியாக)
மறந்து விடுகிறாள்.!
என்ன கெரகமோ,
தனது
திருமணத்திற்குப் பின்,
தான் ஒரு ஆண்
என
கர்வம் கொள்ளும் ஆண்மகன்,
தனது மகளின்
திருமணத்திற்குப் பின்,
அதை
(வசதியாக)
மறந்து விடுகிறான்.