அவிழ்க்க முடியாத முடிச்சு பகுதி 9
இந்த டிரஸில்
நான் அழகா இருக்கேனா?
என்றாள் வள்ளி,
ஒரு புதிய
மஞ்சள் நிற சேலையில்..
முகத்தில் மட்டும்
லேசான வியர்வை...
வேகமாக வந்ததால்
இருக்கலாம்.
அல்லது
வெட்கம், பயம் போன்ற
ஏதாவதொன்றாக
இருக்கலாம்.
அசத்தலாக இருந்தாள்.
ஆனாலும்,
பரவாயில்லை...
மோசமில்லை.
என்றேன்.
உனக்கு வயசாயிடிச்சி..
அதான் உனக்கு பொறாமை.
என்றாள்.
(கலாய்க்கிறாளாம்..)
இருபத்தைந்து
ஆண்டுகள்
ஆகியிருந்தன
நான் பிறந்து...
எனவே நான்
வயதானவன்தான்.
நான் வயதானவன்
என்று சொல்லி,
அவிழ்க்க முடியாத முடிச்சு
போடுகிறாள்...
ஆனால்,
அப்படி ஒரு முடிச்சு
போடுவது,
மிகவும் சுவாரஸ்யமானூல்லவா.....?.
எனக்கு சம்மதமல்ல தான்.
இருந்தாலும்,
இந்த இடத்தில்
என் மௌனம் சம்மதமாகிவிடும்,
எனவே,
முத்தமிடும் அளவுக்கு
பக்கத்துல வந்து சொல் அதை..
என்றேன்.
"அய்ய..
புத்திய பாரு..."
பழிப்பு காட்டினாள்.
அல்லது
கோபப்பட்டாள்.
புத்தியும் இல்ல,
பத்தியும் இல்ல...
எனக்கு வயசாகிடிச்சி.
அந்த அளவுக்கு
நெருக்கமா வந்தால் தானே
என்னால் பார்க்க முடியும்...?.
வயசானவனுக்கு
கண்பார்வை அவ்வளவாக கிடையாது...
கிட்ட வந்தால்,
தெளிவா பாத்து சொல்லுவேன்...
நான் உன்னை
முத்தமிடுவேன்
என்று
சொல்லவே இல்லை.
அருகில் வந்தால்,
நான் முத்தமிட்டு விடுவேன்,
அது அவளுக்கும் தெரியும்....
அருகில் வரா விட்டால்,
'நான் வயதானவன்' என்று
அவள் சொன்னதை
அவளே மறுப்பது
போலாகிவிடும்.
இரண்டாவது பாராவாற்கு
இப்போது
அர்த்தம் புரியுமே..
-கவிதைக்காரன்.