அவிழ்க்க முடியாத முடிச்சு 8
கோபம் என்பது
எதிர்காலத்திற்கான அன்பு
அல்லது
இறந்த கால இயலாமைக்கான
எரிச்சல்.
ஆனால்,
நேற்று என்னவளுக்கு
கோபம் வந்தது,
காரணம்,
முதல் பாரா அல்ல.
ஏதோ விளையாட்டாக
ஆரம்பித்து,
திட்டித் தீர்த்து விட்டேன்
என்னவளை.
விளைவு-இரண்டாவது பாரா.
இரவு
மூன்று மணிவரை
சண்டை போட்டோம்.
காலை
ஐந்து மணிக்கு,
அவள்
குட்மார்னிங் சொன்னபோதே
எனக்குத் தெரிந்து விட்டது,
இந்த நாள் எனக்கு
இனிய நாளாக
இருக்கப்போவதில்லை
என்பது.
போனால் போகிறதென,
ஒரு மணி நேரம் இடைவெளி விட்டு,
ஆறு மணிக்கு,
சண்டையை தொடர்ந்தாள்.
"என்னால,
உன்கூட பேசாமல்
இருக்க முடியல.
உன்னை வெறுப்பதற்கு,
எனக்கு ஒரு ஐடியா
சொல்லுடா,
நீ ஒன்னும்
சும்மா சொல்லவேண்டாம்,
நீ ஐடியா சொன்னால்,
5 முத்தம் தரேன்."
என்றவள்,
"ஐடியா நல்லா இருந்தால் மட்டுமே முத்தம்...",
என்று முடித்தாள்.
"ஐடியா,
நல்லா இல்லாட்டி.?",
என்றேன்.
"என் கழுத்தில் இருக்கிற
5பவுன்
தங்கச் சங்கிலியை தருவேன்..",
என்றாள்.
"இதென்ன கலாட்டா...?
நேத்து சண்டை போட்டது
தப்புதான்.
அதுக்காக,
இப்படி மாட்டி விடக்கூடாது.."
என்றேன்.
"அதெல்லாம் முடியாது,
நீ ஐடியா சொல்லு"
விடாப்பிடியாக கேட்டாள்.
இப்படி முடிச்சு போட்டு பேசினால்,
நான் என்ன செய்ய முடியும்..?.
அதுவும் அவிழ்க்க முடியாத முடிச்சு.
ஆனால்,
அவளுக்குத் தெரியாது,
'அவிழ்க்கவே முடியாத
முடிச்சை அவிழ்ப்பது
சுவாரஸ்யம் எனில்,
அப்படி ஒரு முடிச்சை போடுவது
அதைவிட சுவாரஸ்யம்.'
"சரி,
நான் ஐடியா சொல்றேன்,
ஆனால்,
நான் சொன்ன பேச்சை
நீ கேட்க வேண்டும்.",
என்றேன்.
"சரி.. கேக்குறேன்..."
"நிஜமா..?"
"சத்தியமா கேக்குறேன்..,
நீ ஐடியா சொல்லு..",
என்றாள்.
'மாட்டிக்கிட்டா...'
என்று
நினைத்துக் கொண்டேன்.
"நான் சொன்ன பேச்சை
நீ கேட்கா விட்டால்,
எனக்கு
நீ
ஆறு முத்தம் தரணும்.."
என்ற நான்,
மேலும் சொன்னேன்,
"நீ
என்னை வெறுக்கவே வேண்டாம்..
என்னைக்கால்யாணம்
பண்ணிக்கோ...
நான்
நம் மகனைத் திட்டுறேன்..
அப்புறம்,
உனக்கு என் மேல் வெறுப்பு
வந்துடும்...
வேற ஐடியா கேட்காத.".
"இதுதான்
உன் மொக்கை ஐடியாவா..?.
போடா...",
என்றாள்.
"இங்க பாரு,
சொன்ன பேச்சைக் கேட்பேன்,
என சத்தியம் பண்ணிருக்க...
என் பேச்சை கேட்டு,
இது
நல்ல ஐடியா னு
ஓத்துக்கிட்டு,
ஒழுங்கா 5 முத்தம் குடு.
இல்லாட்டி,
என் பேச்சை கேட்காமல் இருப்பதற்கு
6 முத்தம் குடு..."
"முடிந்தால்,
இந்த முடிச்சை
அவிழ்த்து காட்டேன், பார்ப்போம்.",
என்றேன்.
"போடா..
பொறுக்கி..."
என்று திட்டிவிட்டு,
...
ஐந்தா,
ஆறா.?
தெரியலீங்க..
-கவிதைக்காரன்