அவிழ்க்க முடியாத முடிச்சு – 5
இந்த
கிறுக்கிகள்
எதற்கு கோபம் கொள்கிறார்கள்
என்று புரிவதேயில்லை
பல நேரங்களில்...
அன்றும் கூட
அப்படிதான்.
என்ன தவறு செய்தேன்
என்று தெரியாமலேயே
மன்னிப்பு கேட்டுக் கொண்டிருந்தேன்.
எதற்கு கோபப்படுகிறாள்
என்றே தெரியவில்லை..
வாங்கி வந்த
ரோஜாவை கொடுத்தேன்...
வேண்டாமென
திருப்பி தந்தாள்.
அவளுக்குப் பிடித்த
ஐஸ்கிரீமை
அவள் கையில் தந்தேன்.
திருப்பிக் கொடுத்தாள்..
"பிடிக்கலைனா
திருப்பி தந்துடுவா
இந்தக் காதலி.."
என்ற
அலட்டல் வேறு.
ஆனால்
அவளை எப்படி
சமாதான படுத்துவது
என்றே தெரியவில்லை.
அவிழ்த்துப்பார்
என போட்டிருக்கிறாள்,
ஒரு அவிழ்க்க முடியாத
முடிச்சை..
மக்களே,
நானும் பலமுறை
சொல்லி விட்டேன்
உங்களிடம்,
இருந்தாலும் பரவாயில்லை
இன்னொரு முறை
காதில்
வாங்கிக் கொள்ளுங்கள்.
"அவிழ்க்கவே
முடியாத முடிச்சை
அவிழ்ப்பது
சுவாரஸ்யம் தான்..
ஆனால்
அப்படி
ஒரு முடிச்சை போடுவது
அதைவிட
சுவாரஸ்யம்.
என்னது,
உனக்கு பிடிக்கலைனா
திருப்பி தந்துடுவியா..?
அப்ப நான் கொடுத்தது
உனக்கு பிடிக்கலியா..?
உனக்கு கோபம்
என் மேல
ஆனால்
கோபத்தை
ரோஜா மீதும்
ஐஸ்கிரீம் மீதும்
காட்டுகிறாய்.
சட்டென
அவள் எதிர்பாராத
ஒரு தருணத்தில்,
அவள் தலையை
இறுக்கமாக பற்றி,
அவள் நெற்றியில்
மென்மையாக
முத்தமிட்டு
அணைத்துக் கொண்டேன்.
அவளுக்கும்
அது பிடித்திருந்தது.
இருந்தாலும்
கோபத்தில்
இருக்கிறாளல்லவா..?.
ஒன்னும் வேணாம்
என
தள்ளி விட்டாள்
என்னை,
புன்னகைத்தேன்.
என் செல்லக்குட்டி
இப்ப முத்தம் கொடுத்தேனே,
அதையும்
திருப்பி தந்துடுவியா.?.
ஒரு வேளை
நீ
திருப்பி தந்தால்,
என் முத்தம் உனக்கு பிடிக்கவில்லை
என்றாகிறது..
திருப்பி தராவிட்டால்,
என் முத்தம் உனக்கு பிடித்திருக்கிறது
என்றாகிறது.
-கவிதைக்காரன்