தாலாட்டு

தாலாட்டு பாட நேரம் இல்லை
தாயாருக்கு கொடுக்காதே தொல்லை

த.பால்தங்கம் – சென்னை

அன்பை ஊட்டும் அன்னையின் தாலாட்டு
அகிலம் மறக்கும் பிள்ளையின் பாராட்டு

கோ கே. ஏழுமலை – கள்ளக்குறிச்சி

அன்னையின் அரவணைப்பில் மடி
சாய்ந்து படுத்தால் சொர்க்கமே தோற்றுவிடும்

த.சுகுணா – மதுரை

தம் தாய்மையின் தாலாட்டு…
தாம் தலை அசைந்து கேட்ட முதல் பாட்டு…

ஏழு ஸ்வரங்களுக்கும்
ஏழு கண்டங்களுக்கும்
இதுவே முதல் எடுத்து காட்டு

சு.க.சீ லிட்டில் பாரதியார் – கள்ளக்குறிச்சி

அன்னையின் தாலாட்டை மிஞ்சும் தேன் ஊற்று…….
உண்டோ இவ்வுலகில்

கு. கோகிலா – விழுப்புரம்

அன்னையின் தாலாட்டு
நான் கேட்ட முதல் பாட்டு!

தேவி க – சென்னை

பகலை இரவாக்கும் பாட்டு
அன்னையின் தாலாட்டு வரம்

சுந்தர் சுவாமிநாதன் – திருநெல்வேலி

உறங்காத விழிகளிலும் உயிரேந்தும் அன்புத் தாலாட்டு!
உலகமே கைவிட்டாலும் மடியேந்தும் தாயின் சீராட்டு!

சி. கிருஷ்ணவேணி – தருமபுரி

அன்னை பாடும் முதல் பாட்டே
அகிலத்தில் குழந்தை அறியும் தாலாட்டு

பெ. சுஜித் – கள்ளக்குறிச்சி

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top