vali kavithai
காதல் வலி
காதலிக்க கையில் ஆகாதவன் என்ற பெயரை
பெற்றோரிடமே வாங்கிவிட்டேன்
ஐந்து வருட காதலி அனாதையாக விட்டுச்சென்றதை
எப்படி சொல்வேன் அவர்களிடம்
என் தலையணை உறைகளை அம்மா
அடித்து துவைத்து பிழியும் போது
அதில் என்னுடைய கண்ணீர் துளிகளும் உள்ளது
என்பதை எப்படி சொல்வேன்
எத்தனையோ காலம் தள்ளி
ஒரு உறவு வருவதாக எதிர்பார்த்தேன் ஆனால்
அது வரும் முன்னே பல
எதிர்மறையான எண்ணங்களை எனக்குள் புகிர்த்திவிட்டது
இனியும் நம்பிக்கை இல்லை
வரும் உறவுகளிலில்லை என் எதிர்காலத்தில்.