அதன் பெயர்
வாழ்வின் கோர பிடியில்,
நல்லது நடக்க
நிறைய வாய்ப்புகள்
இருந்தாலும்,
கெட்டது தான் நடக்கிறது.
அதே போல
கெட்டது நடக்க
எந்த வாய்ப்பும்
இல்லாவிடினும்
எப்படியோ
கெட்டது மட்டும்
நடந்தே விடுகிறது....
சிறுவயதில்,
நல்ல பள்ளி கிடைப்பதில்லை.
அப்படியே கிடைத்தாலும்,
நன்றாக
படிக்க முடிவதில்லை.
அப்படியே படித்தாலும்,
நல்ல வேலை
கிடைப்பதில்லை.
அப்படியே கிடைத்தாலும்,
நல்ல துணை
அமைவதில்லை.
அப்படியே அமைந்தாலும்,
நல்ல குழந்தைகளை
பெற முடிவதில்லை.
இத்தனை அமையாவிடிலும்
எல்லோருக்கும்,
ஒன்றே ஒன்று மட்டும்
மிகச்சரியாக
வேலை செய்கிறது.
அதன் பெயர்
"விதி"
-கவிதைக்காரன்