கவிதை
தலைப்பு என்பது
என் கவிதைக்கு மட்டுமில்லை
உன் சேலைக்கும்தான்
நீ
சேலையில் வந்தால்,
தலைப்புடன் கூடிய
கவிதையாகிவிடுகிறாய்
ஆனால்,
நீ
ஒரு குறும்புக்காரி,
அடுத்த நாள்
வேண்டுமென்றே,
சுடிதாரில் வருகிறாய்
"இப்போது
என்னடா சொல்லுவாய்",
என்ற கேலியோடு
கண்ணே...
நீ சேலையில் வந்தால்
கவிதை..
சுரிதாரில் வந்தால்,
புதுக்கவிதை..