உறவுகள் கவிதை

உண்மையான உறவுகளும் உண்டு
உனக்கான உறவுகளும் உண்டு

பழமையான உறவுகள் உண்டு
பாழாக்கும் உறவுகளும் உண்டு

உடன் வரும் உறவுகள் உண்டு
ஊக்குவிக்கும் உறவுகளும் உண்டு

பகிரும் உறவுகள் உண்டு
பழி சொல்லும் உறவுகளும் உண்டு

உயர வைக்கும் உறவுகள் உண்டு
உத்தமமான உறவுகளும் உள்ளது

முதலில் வரும் உறவுகள் உண்டு
முடிந்து போன உறவுகளும் உண்டு

கற்றுத் தந்த உறவுகள் உண்டு 
கடந்து போன உறவுகளும் உண்டு

கலந்து கொண்ட உறவுகள் உண்டு
கவலை தந்த உறவுகளும் உண்டு

நிலைத்திருக்கும் உறவுகள் உண்டு
நிராசையான உறவுகளும் உண்டு

நீண்டகால உறவுகள் உண்டு
 நின்று போன உறவுகளும் உண்டு

ஏற்றுக்கொண்ட உறவுகள் உண்டு
எதிர்த்து நின்ற உறவுகளும் உண்டு

என்னை அறிந்த உறவுகள் உண்டு
ஏமாற்றி சென்ற உறவுகளும் உண்டு

பாசத்தால் வரும் உறவுகள் உண்டு
பணத்தால் வரும் உறவுகளும் உண்டு

பாசை அறியா உறவுகள் உண்டு
பாசாங்கு செய்யும் உறவுகளும் உண்டு

கல்வியில் வந்த உறவுகள் உண்டு
காலம் கடந்த உறவுகளும் உண்டு

துரத்தி வந்த உறவுகள் உண்டு
தூற்றி திரிந்த உறவுகளும் உண்டு

பாடம் புகட்டிய உறவுகள் உண்டு
பகடையாய் பயன்படுத்திய உறவுகளும் உண்டு

பகைக்காத உறவுகள் உண்டு
பச்சோந்தியாய் மாறிய உறவுகளும் உண்டு

மன்னித்த உறவுகள் உண்டு 
மறந்து சென்ற உறவுகளும் உண்டு

பசி தீர்த்த உறவுகள் உண்டு
பரிசோதித்த உறவுகளும் உண்டு

உண்மை சொன்ன உறவுகள் 
பொய்த்து போன உறவுகளும் உண்டு

கிண்டல் செய்த உறவுகள் உண்டு
கிடைக்காதா என நினைத்த உறவுகளும் உண்டு

என்னால் வந்த உறவுகள் உண்டு
என்னை பிரிந்த உறவுகளும் உண்டு

-பிபி


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top