காதலா காமமா
"நொடிக்கொருதரம்
உன்னைத்
தொட்டுபார்ப்பேன்..
ஒருவர் கீழே..
மற்றொருவர் மேலே.
இருட்டாக
இல்லாவிட்டால் என்ன,
நாம்
ஒன்று சேர்ந்தாலே
இருள்தான்.
பகலில்
பாதி நேரம்
பிரிவுதான்.
ஆனால்,
இரவுகள்
நமக்கே
நமக்கானவை,
காதலா
காமமா
தெரியவில்லை."
இதை மட்டும்
படித்து விட்டு,
"என்ன,
இப்படி டர்ட்டியா எழுதுற.?",
என்றவாறே
என் காதை திருகினாள்
என் தோழி,
"விடுடி
வலிக்குது.
உனக்குத்தான்
டர்ட்டி மைண்ட்.
மறுபடியும் படிச்சி பாரு.",
என்றேன்.
மக்களே.
நீங்களும்,
என் தோழி போல
டர்ட்டியாக
புரிந்து கொண்டு விடாதீர்கள்.
இதன்
கடைசி பாராவையும்
படித்து விடுங்கள்.
நான்
மேல் இமை,
நீ
கீழ் இமை.
-கவிதைக்காரன்