சவால்
தைரியம் என்பது
பயம் இல்லாதது போல் நடிப்பது என்பார் நடிகர் கமல்ஹாசன்,
அதே போல
சவால் என்பது
தன்னம்பிக்கை.
நிச்சயம், செய்து விடுவோம்
என்ற தன்னம்பிக்கை.
பெரும்பாலும்,
ஜெயித்துக்காட்ட வேண்டும்
என்ற வெறிதான்,
சவால்.
ஆனால்,
"நீ
தைரியமானவனா.?
போடா...
காமெடி பண்ணாத.",
பரிகாசித்தாள்
அவள்
தற்பெருமை
தவறுதான்.
சில நேரங்களில்
தற்காப்புக்காக
தற்பெருமை
தவிர்க்க முடியாததாகிவிடுகிறது.
"ஏய்,
என்னடீ
ஓவரா பேசுற.
நானெல்லாம்
பெரிய ரவுடி
அப்படிங்குறது
மறந்து போயிடுச்சா.?."
(நான் ரவுடி இல்லை,
ஆனால்
அது அவளுக்கு தெரியாதே.!)
"நீ
அவ்ளோ பெரிய
தைரியசாலியா?.
எங்கே,
எனக்கு முத்தம் குடுக்குற
அளவுக்கு
உனக்கு தைரியம் இருக்கா.?"
சவால் விட்டாள்.
இக்கவிதையின்
இரண்டாம் பாராவை
மறந்து விடுங்கள்
ஏனெனில்,
சில நேரங்களில்
தோற்பதற்காகவே
விடப்படும்
சவால்கள்.
-கவிதைக்காரன்