கவிதைகள்
முத்தம்
வேகம்கொண்டு இதழ் ஒற்றி எடுக்கும் நிமிடங்களில் உணர்ந்துக்கொள்
இனி தொடருமா என்ற வலியின் வெளிப்பாடே அந்த ஒவ்வொரு முத்தமும்
காதல் செடி
வளராமலும், கருகிபோகாமலும் இருக்கும்
காதல் செடிக்கு நீர் ஊற்றி
கொண்டுதான் இருக்க போகிறேன் இனிமேலும்
என் காதல்
என் காதல் புரியவில்லையா இல்லை!
தொடரத்தான் முடியவில்லையா
எப்படியோ சிறிது காலம் பேசிவிட்டு செல்
என் இதயம் துடித்துக்கொள்ளட்டும்
மௌன மொழி
நீ உன் மௌனமொழியை தொடரும் போதுதான்
இறுகபற்றி கொள்கிறது எந்தன் காதல் மொழி
உன் நினைவு
உன் நினைவுகளை இளைப்பாற செய்ய புத்தகத்தை புரட்டுகிறேன்
முதல் பக்கத்தில் வரவேற்கிறது உன் பெயர்
-சுசிபாலா பாண்டியன்