காதல்ல இதெல்லாம் சாதாரணமப்பா
பொதுவாக,
மோதலில் தான்
காதல் ஆரம்பிக்கும்
என்பார்கள்....
ஆனால்,
என் காதல் என்னவோ
இன்னும் மோதலிலேயே
இருக்கிறது
என்றெல்லாம்
சொல்ல மாட்டேன்....
காரணம்,
காதலிக்க ஆரம்பித்த பின்,
சமாதானம் செய்வதிலேயே
என் காதல்
பிஸியாக இருக்கிறது.
"என்னால
சரியா சாப்பிடவே
முடியல மாமா...
எனக்கு யாரோ
பில்லி சூனியம்
வச்சுட்டாங்க....
அதனால
தினமும் பெருமாள் கோயிலுக்கு
போறேன்",
என்றாள்.
"இல்லடி...
உனக்கு
பில்லி சூனியம் எல்லாம்
வைக்க முடியாது...
தேவதை வசியம்
வச்சிருக்கலாம்....",
என்றேன்.
"நான் தேவதையா மாமா....",
என்றாள் பெருமையாக.
"அதில்லடீ...
தேவதைகளுக்கு, பில்லி
சூனியம் வைக்க முடியும்.
பிசாசுகளுக்கு எப்படி
அதை வைக்க முடியும்...?.
பிசாசுகளுக்கு,
தேவதை வசியம் தானே
வைக்க முடியும் ....?"
கையில் வைத்திருந்த
பூஜை கூடையை,
என் மீது வீசிவிட்டு
சொன்னாள்,
"பிசாசுங்க
இப்படித்தான் அடிக்குமாம்.."
போச்சுடா...
கோவிச்சுக்கிட்டா....
நான் அப்பவே
சொல்லல....?.
ஞாபகம் இல்லாட்டி,
இக்கவிதையின்
இரண்டாவது பாராவை
படித்து பாருங்கள்...
"சரி சரி...
கோவிச்சுக்காதடீ புள்ள..
கோயிலுக்குள்ள போகாத,
வெளில இருந்தே
சாமி கும்பிட்டு
வந்துடு....."
"ஏன்...?",
என்றாள் கோபமாக.
"அது ஒண்ணுமில்லடீ....
தினமும் கோயிலுக்குள்ள
போனின்னா,
'அட... இந்த பொண்ணு
ரொம்ப அழகா இருக்கேன்னு'
பாற்கடலில் இருந்து
பெருமாள் எழுந்து வந்து,
'இந்த பொண்ணு எனக்கு பத்தினியா வேணும்னு
சொல்லிட்டாருன்னா,
நான் என்னடீ பண்றது??"
"க்க்கூம்..
இதுக்கு ஒன்னும்
குறைச்சலில்லை...",
என்றவள்,
முழுவதுமாக சமாதானமாகி,
சந்தோஷத்தை தனக்குள்ளே
மறைத்துக் கொண்டு,
"சரி மாமா...
நான் கோயிலுக்கு
போயிட்டு வரேன்...
வந்து,
உங்களுக்கு
இன்னிக்கு அசைவம்....",
என்றுவிட்டு
கிளம்பி போனாள்.
(அட...
நம்புங்கப்பா...
அசைவம் என்றால்,
சிக்கன் அல்லது மட்டன்).
அதே நேரம்,
ஏதோ ஒரு சேனலில்,
கவுண்டமணி வசனம்
பேசிக் கொண்டிருந்தார்,
"அரசியல்லலலல
இதெல்லாம் சாதாரணமப்பா...."
-கவிதைக்காரன்