பெண் தோழி கவிதைகள்
அவள் போட்டா டா
"நான் போட்ட டீ யை விட அவள் போட்டா டா க்களில் என்றும் சுவை அதிகம்"
நினைவிற்கு வருகிறாய்
சரி.. சொல்லித்தான் ஆகணும்..
யாரோ யாரையோ கூப்பிடும் போதெல்லாம் நீ நினைவிற்கு வருகிறாய்...
யாரோ ஒருத்தி
யாரோ ஒருத்தி..
அம்மு அங்காடி எனும் கட்டைப் பையில் பொருள் நிறைய போகிறாள்..
எனக்கும் கவிதைகள் தந்த அந்த சந்தன விரல்களை வருடி
வாசத்துடன் வரிகள் பேச.. சுவாசமின்றி...
சுடுமண்
நடுகல் நம்மூரில் இன்று வழக்கமில்லாது போனது..
சுடுமண்ணும் அழிவதற்குள் என் தேகத்தில் பச்சையாய்...
பிள்ளை பிறந்து
சரி.. அப்படியே விடுங்கள்..
அவளுக்கும் பிள்ளை பிறந்து
என் பெயர் சூட்டி அவள் அன்பை தீர்த்துக் கொள்ளட்டுமே
-ஊர்குருவி