துரோகத்திற்கொரு சவால்
மறந்து போக
நீ
நினைத்தால்,
இறந்து போக
நான்
நினைப்பேன்!
சே
உன் பிரிவின்
போதுதானா,
யாரோ,
யாரையோ
உன் செல்லப்
பெயர்,
சொல்லி
கூப்பிட்டு,
அது என்னை
வலிக்க
வேண்டும்?
எதுவுமே
நடக்காதது போல்
நடமாட
முடிகிறதே
உன்னால்?
எப்படியோ
போடீ.
எனக்கு
நீ
துரோகம்
நினைத்தால்.
அந்த
துரோகத்திற்கொரு
சவால்.
என்னையும்,
உனக்கான
செல்லப் பெயரையும்
மறந்து தான்
காட்டேன்
பார்க்கலாம்!!!