யாவுமே நீ தானே
அன்பென்னும் அகராதியால் அரவணைக்கும் என் அன்பானவனே
ரசிக்க ரசிக்க ரசனையூட்டும் எந்தன் ரசிகனே
நினைவுகளால் சிலிர்ப்பூட்டும் எந்தன் கிறுக்கனே
கவிதைமொழியால் கதைக்கும் எந்தன் கவிஞனே
நிபத்தனையற்ற காதலில் அழகாக்கும் எந்தன் காதலனே
எந்த மொழியில் உன்னை அழைக்க யாவுமே நீ தானே.