அடைமழையும் அவளும்
அந்திநேரத்து அடைமழை மணிகளாய்
மண்ணில் தவிழ்ந்து கொண்டுருந்தன.
வான்தேவதை போல் வண்ணமிட்டு வந்தாள்.
காற்றுடன் சண்டையிட்ட
காட்டன் புடவையை சரிசெய்து கொண்டு.
மழையின் ஈரம்பட்ட ஸ்பரிசதில்
குளிர்ந்த கூந்தலை வருடியப்படியே வந்தாள்.
அவளின் இதழில்பட்டு தெரிந்த
மழைத்துளிக்குள் அத்தனை மகிழ்ச்சி.
மழையில் நனையாமல் நின்ற என்னை
மங்கை நனைய வைத்துவிட்டாள்.
மழையோடு வந்து மனதைபறித்து கொண்டாள்,
இயற்கையின் எழிலாக தோன்றி இனிய தேவதையாகி போனாள்.