அவளதிகாரம்
அழகான மோதலில்
ஆரம்பிக்காது
அத்தனை காதலும்..
காதல்,
எத்தனை வலுவானதாக இருந்தாலும்
அதன் ஆரம்பப்புள்ளி
நினைவிருப்பதில்லை..
எப்படி
ஆரம்பித்தது
என்று
தெரியவில்லை.
ஆனால்,
செல்ல சண்டைகள்
ஏராளமாய்.
இப்போது கூட,
பக்கி..
பன்னாட..
என்று திட்டுகிறாள்,
நான் அவளை
லூசு, என்றுகூட
சொல்லக்கூடாது.
இது
சர்வாதிகாரமா?
அவளதிகாரமா?.
தெரியாமல் தான்
கேட்கிறேன்,
நாங்கள்
காதலித்து கொள்கிறோமா?
சண்டை போட்டு கொள்கிறோமா?