அவிழ்க்க முடியாத முடிச்சு 10
பழிக்குப் பழி
என்பது
குரோதம்...
கவிதைக்காரி,
ஒரு கவிதை
எழுதினாள்.
உன் கவிதை
மிக அழகாக இருக்கிறது...
ஆனால்
அவை
உன்னை விட
அழகாக இல்லை...
என்றேன்.
"க்க்கும்...
இதுக்கு
ஒன்னும் குறைச்சலில்லை....
இந்த
ஐஸ் வைக்குறத்துக்கெல்லாம்
மயங்க மாட்டேன்.."
என்றாள்.
"அப்ப,
வேற எதுக்கு
மயங்குவ...?",
கண்ணடித்தேன்.
பனியாரம்
சாப்பிட வேண்டும்,
பனியார சட்டி
வாங்கித் தாங்க...
என்று
எத்தனை நாள்
கேட்பது உங்களை...?..
நாளைக்கு
வாங்கி வரலைன்னா,
ஒரு வாரத்திற்கு
உங்ககிட்ட பேசமாட்டேன்..."
என்று
பயமுறுத்தினாள்,
அல்லது
ஆசை காட்டினாள்.
தேவையில்லாத போது
கண்ணில்
அடிக்கடி பட்டுத் தொலையும்...
தேவைப்படும்போது
சல்லடை போட்டு
சலித்தாலும் கிடைக்காது....
மேற்கண்ட
இதே பாரா தான்
எனக்கும் நடந்தது....
நாங்கள்
இருந்த ஊரில்,
பனியார சட்டி
கிடைக்கவே இல்லை....
"எனக்குத் தெரியுமே...
உங்களுக்கு
அது கிடைக்காது என்று..."
கோபத்தில்
முகம் சிவக்க,
"ஒரு வாரம்
உங்களோடு
பேசமாட்டேன்...."
என்று விட்டு
வெடுக்கென்று
போனாள்
என்னை விட்டு...
48 மணிநேரம்
போனது..
48 யுகங்கள் போலிருந்தது
எனக்கு...
ஒரே வீட்டில்
இருந்தாலும்,
என் தொலை பேசி
எடுத்து
அவளுக்கு
ஃபோன் செய்தேன்.
ஆனால்,
அந்தோ பரிதாபம்...
எனது எண்
அவளது
அலைபேசியில்
பிளாக் செய்யப்பட்டிருந்தது....
"ஏண்டி
என் நம்பரை
பிளாக் பண்ணி வச்சிருக்க...?"
லேசாக கத்தினேன்,
லேசான கோபத்தில்....
"நீங்க
எனக்கு
பனியார சட்டி
வாங்கித்தரலல்ல....
அதான்...
பழிக்குப் பழி....",
என்று சிரித்தாள்,
பழைய தமிழ்பட வில்லி போல....
ஆண்டவா...
இதென்ன
சோதனை....
எந்த கடையிலும்
அது இல்லடீ...
என்று சமாளித்தாலும்,
அவள் விடுவதாக
இல்லை....
பழிக்கு பழி
என
ரிவென்ஜ்
எடுக்குறியா....
இதோ வர்றேன் இரு....
சட்டென
அவளை அணைத்து,
இதழில் முத்தமிட்டேன்...
"பழிக்கு பழி தானே...
இதையும் திருப்பி
செய்டீ பாக்கலாம்..."
என்றேன்
திமிராக.
அவிழ்க்க முடியாத முடிச்சு
போடுவது
எப்போதும்
சுவாரஸ்யமானது தானே....
கோபமாக அவள்
ஏதோ சொல்ல வந்த
அதே வினாடியில்,
வாசலில் இருந்து
ஒரு சத்தம்...
"மேடம்...
நான் ஃபிளிப்கார்ட்டிலிருந்து
வர்றேன்...
என்ற
டெலிவரிபாய்,
எங்களது
ஆர்டரை
அவள் கைகளில்
கொடுத்து விட்டு சென்றான்..
பார்சலை பிரித்தாள்...
உள்ளே.....
பனியார சட்டி...
இரண்டு
நாட்களுக்கு முன்பே
நான் ஆர்டர்
பண்ணிட்டேன்டீ
கண்ணம்மா....
"சாரி மாமா"
என்றவள்
என்னை கட்டியணைத்து
முத்தமிட்டாள்,
காரணம்
முதல் பாரா அல்ல...!
-கவிதைக்காரன்.