அரை மணிநேரம்
ஆயிரம்
உறவுகள்..
நானில்லா
விட்டால்
என்ன.
நல்லவனோ,
கெட்டவனோ,
ஏராள
நண்பர்கள்
ஆறுதல்
சொல்ல.
யாரென்றே
தெரியாத
ரவி அண்ணாவிடம்(?!)
சொல்லிவிடுவேன்
என
மிரட்டல்
வேறு.
இனிமே,
என்னைப்
பார்க்க
வராதே
என்று
சொன்ன
நீ,
என்னை
வந்து
பார்ப்பதற்காக,
உன் சமையல்
வேலையை
ஒரு
அரைமணி நேரம்
ஒத்திப் போடுவாயா.?
உன் வீடு
இருக்கும்
தெருவில்தான்
என்னுடைய
இறுதி
ஊர்வலம்.!!!