தையல்காரி
என் மனைவி
ஒரு தையல் காரி.
எல்லோரின் மனைவிகளும்
தையல்காரிகள் தான்.
அது எப்படி...?.
தூய தமிழில்,
தையல் என்றால் பெண்
இன்று அவள்,
அருமையாக ஒரு சட்டை
தைத்திருந்தாள்....
அட,
உண்மையிலேயே
அவள் துணி தைக்கத் தெரிந்த
தையல்காரிதான்.
"மாமா மாமா...
என்னை பாராட்டு...
நான் ஒரு சட்டை
தச்சிருக்கேன் பாரு...."
என்றவள்,
"சபாஷ் டீ வள்ளி...
அருமையா தச்சிருக்க...
சூப்பர் டீ, சூப்பர்...."
என்று
தன்னைத்தானே
பாராட்டிக் கொண்டாள்.
எனக்குத் தெரிந்த
சில கவிஞர்கள் உண்டு...
தங்கள் கவிதைகளுக்கு
முதல் வரிக்கு
முன்பு,
'ஆமா...
சூப்பர்..
உண்மை தான்..."
என்று
தங்களைத் தாங்களே
பாராட்டிக்கொள்வார்கள்....
"டேய்...
அது உண்மை...
அது சூப்பர்..."
அப்படி னு
படிக்கிற நாங்க சொல்லனும் டா.
இந்த கவிதை சம்பவத்தையும்,
என் மனைவி தையலை தானே பாராட்டியதையும்....
இரண்டையும்
அவளே முடிச்சு
போட்டுக்கொண்டு விட்டால்....
இன்றே
இந்த உயிரின்
கடைசி தினம்.
அல்லது
என் ஆவிக்கு (பேய்க்கு)
பிறந்த நாள்.....!!!
-கவிதைக்காரன்