கவிதை
இப்போது
மட்டுமல்ல.
எப்போதுமே
கவிஞனுக்கு
மட்டும்
ஓர் வசதி
உண்டு.
அரசனையே
"அவன்", என
அழைக்கலாம்.
கவிதையிலேயே,
வர்ணிக்கலாம்,
வருத்தப்படலாம்,
கோபப்படலாம்.
கொஞ்சம் சிரிக்கலாம்.!
ஏன்,
காதலும் கூட
சொல்லலாம்.!!
உன் வீட்டில்
எனக்கு மட்டும்
இடமில்லை,
நீ விருந்தாளி.
இப்போது உன்னை
அழைக்கவில்லை.!
எனும் போது,
அவ்வளவையும்
செய்ய முடிந்த
கவிதையால்,
என்னால் அழத்தான்
முடிந்தது.!
ஏற்கனவே
நான்
சொன்னதுதான்,
இருந்தாலும்,
நான்
கவிதையால் தானே
அழ வேண்டியதிருக்கிறது,
நீ என்னைக்
காதலால்
அடிக்கும்
தருணங்களில்.!