kadhal vali kavithai
பிறந்தநாள் வாழ்த்து
நேற்று இரவு முழுவதும் யோசித்தேன்
நாளை அவளது பிறந்தநாள்,
நல்ல கவிதை கூறி வாழ்த்த வேண்டும் என்று,
சுவற்றில் தொங்கிக்கொண்டிருந்த நாட்காட்டி
என்னை பார்த்து சிரித்து கொண்டே சொன்னது
ஒரு மாதம் முழுவதும் வராத கவிதையா
உனக்கு ஒரு இரவில் வரப்போகிறது,
போ பிறந்தநாள் வாழ்த்துக்கள்
என்று மட்டும் சொல் அது போதும் என்று.