துன்பம் வந்துவிட்டால் தூக்கம் வரவில்லையே 
இமைமூடி கண்ணுறங்க காலம் துணை இல்லையே 

நெஞ்சம் வலிப்பதால் நேரம் செல்லவில்லையே 
தனிமையில் இருப்பதால் தப்பிக்க வழி இல்லையே 

மெத்தையில் படுத்தாலும் மேனியில் சுகமில்லையே 
துக்கத்தை மறக்கவே சூழ்நிலை விடவில்லையே 

கேள்விகள் எழுந்தாலும் விடைகள் கிடைக்கவில்லையே
சோகங்கள் சூழ்ந்தாதால் சொல்வதற்கு மனமில்லையே 

மறக்கவே நினைத்தாலும் நினைவுகள் நிற்கவில்லையே 
வேதனை வந்ததால் வேகம் எனக்கில்லையே

கலக்கம் நிலைப்பதால் கவனம் போதவில்லையே 
காத்திருந்து கரைந்தாலும் இரவுகள் விடியவில்லையே

-பிபி

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top