மழலை கவிதைகள்
சித்திரை
சித்திரை சிரிப்பினால் சிறைப்படுத்தி சினத்தினையும் சிதைக்கிறாய்
பச்சிளம்பூ
பிஞ்சுபாதங்களினால் பாசம் படரவைத்து பற்றிக்கொள்ளும் பச்சிளம்பூ
மழலை மொழி
மழலைமொழியால் மனகசப்பிற்கு மருந்தூட்டி மகிழ்விக்கும் மழலைசெல்வம்
வண்ணத்துப்பூச்சி
விந்தைகளால் வியக்கவைத்து வண்ணத்துப்பூச்சியாய் வலம்வந்து வளர்த்துசெல்
மாயம்செய்கிறாய்
மையீட்டு, மண்டியீட்டு, மௌனமொழியால் மாயம்செய்கிறாய் மழலையே