மழை
பத்துப்பாட்டு வள்ளுவருடையது .
பெய்யாவிட்டால் ஒன்றும் இல்லை
பெரிதாய் பெய்தால் தொல்லை.
த.பால் தங்கம் – சென்னை.
விண்ணின் முத்துக்கள் மண்ணைத் தொட,
மகிழ்ச்சியில் நடனமாடுகிறது
பச்சை மரம்!
கோ கே. ஏழுமலை – கள்ளக்குறிச்சி
மண்ணின் மீதுள்ள
தன் காதலை மெய்ப்பிக்க
போராடும் நீர்த்துளி – மழை
கோகிலா செல்லப்பன் – நாமக்கல்
வற்றாத நதிகளை உருவாக்கும்
புண்ணிய நீரும்! பசுமை நமக்கு
தந்த வர பிரசாதமும் நீயே!
த.சுகுணா – மதுரை
மேகத்தின் மடியில்
மின்னலின் கையெழுத்து
மண்ணில் மழலை!
மாணிக்கவாசகம் நாகேசுவரன் – வடலூர்
வானம் திறந்து
பூமியின் தாகம் தீர்க்கும்
ஆனந்த மழை
மை. சத்திய பாரதி – தூத்துக்குடி
ஆகாயம் மனதில் திரண்டிருந்த
காதலை சிறிதும் மறைக்காமல்
நிலத்தில் சொல்லும் மொழி
சுந்தர் சுவாமிநாதன் – திருநெல்வேலி
மண்ணைத் தொடும் துளிகள்
மீண்டும் என்னை ஏந்தும்
தாயின் மடி
தேவி க – சென்னை
அழையா விருந்தாளி
அகிலத்தின் கொடையாளி
லிட்டில் பாரதி – கள்ளக்குறிச்சி
கருமுகிலின் திரையை கிழித்து- மானிடருக்கு
கடவுளாய் வருவதும் இந்த மழையே
உருவமில்லாமல் உலகை அழிப்பதும் இவையே
பெ. சுஜித் – கள்ளக்குறிச்சி
கருமுகில் கூட்டங்கள் வானில் சூழ்ந்து
காற்றின் வேகத்தில் மெல்ல அசைந்து
மண்ணின் தாகத்தினை தீர்க்க வந்தாயோ, நீ

