தோல்வியே வெற்றியின் தொடக்கம்
படிப்பு பெற படிப்பினை பலவும்
பார்த்திடுவோம் பலத் தோல்வி கண்முன.
அடிப்படை புரிந்து கொண்டால் கேட்டபடி
அன்புடன் வெற்றி பற்றிக் கொள்ளும்
துடிப்புடன் இரவு பகல் உழைக்கும் உழைப்பாளி
துவளாமல் அடைந்தது ஆயிரம் தோல்விகளே
ஆடிப்பட்டம் தேடி விதைத்து நெல் மணி உருவாக
அனைவரும் நேரம் பார்த்து உழைப்பது இல்லை
விடுதலைக்கு பாடுபட்ட போராளிகள் அன்று
வித்தாய் தோல்வியை கண்டவரே அறிவோம்
அடிபட்ட ஆபிரகாம் லிங்கன் எழுந்து
அதன்பின் அடைந்ததோ வெற்றியோ வெற்றி
ஈடிலா தாமஸ் ஆல்வா எடிசன்
9999 முறைத்தோல்வி.
இறுதியில் தந்ததோ அவருக்கு தாராளவாகை
தேடி வால்ட் டிஸ்னி தோல்விக்கு பின்வென்றார்
தனியான புகழ்பெற்றவர் என்றால் மிகையில்லை
நாடி ஸ்காட்லாந்து மன்னன் ராபர்ட் ரூல்ஸ்
நாட்டில் ஆறு முறை தோல்வியைத் தழுவி பின்னர்
மடியிலா
சிலந்தி ஆறு முறை பின்ன முடியாமல்
மறுமுறை முழுதும் வென்றதை கண்டு
மடிவிட்டு தானும் முயன்றே நாட்டையும் மீட்டார்
பாடு தோல்விதான் வெற்றியின் தொடக்கமம்
தோற்கடிக்கத்தான் தொல்லுலகில் பிறந்தோம்
படிப்பினையால் தோல்வியை பின்தள்ளி வெல்வோம்.

